Tamilnadu
ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து வந்த பெண்ணுக்கு லைசென்ஸ் கொடுக்க ஆர்டிஓ மறுப்பு!
ஜீன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து வந்த பெண்ணுக்கு ஓட்டுநர் உரிமம் தர சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலர் மறுத்துள்ளார்.
லைசென்ஸ் எடுப்பதற்கு ஆடைக் கட்டுப்பாடு இல்லையென்றாலும், ஒழுங்கான ஆடை அணிந்து வர வேண்டும் என ஆர்.டி.ஓ அதிகாரிகள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், அண்மையில் கே.கே.நகரில் ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்காக சோதனை ஓட்டத்தில் கலந்துகொள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து வந்துள்ளார்.
இதனைக் கண்டதும், வட்டார போக்குவரத்து அலுவலர் வேறு உடை மாற்றி வந்து சோதனையில் பங்கேற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மற்றொரு பெண் கேப்ரி வகை பேண்ட் அணிந்து வந்ததால் அவரையும் அதிகாரி சோதனையில் பங்கேற்க அனுமதி மறுத்துள்ளார்.
ஷார்ட்ஸ், கைலி போன்ற கேஷுவல் ஆடை அணிந்து வந்த ஆண்களையும் போக்குவரத்து அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆகையால் இந்த விதி பெண்களுக்கும் பொருந்தும் என ஆர்டிஓ அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அதிகாரி ஒருவர், மக்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களுக்கும் எப்படி செல்வார்களோ அம்மாதிரியே அரசு அலுவலகங்களுக்கும் வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!