Tamilnadu
“மோடி - ஜி ஜின்பிங் வருகைக்காக போக்குவரத்து மாற்றம்” - பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!
சென்னை மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி இடையே அதிகாரபூர்வமற்ற சந்திப்பு நடைபெறுகிறது. அக்டோபர் 11,12-ம் தேதிகளில் மோடி, சீன ஜின்பிங் இருவரும் சந்தித்துப் பேசுகிறார்கள்.
பிரதமர் மோடியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் நாளை மாலை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச உள்ளனர். மாமல்லபுரத்தில் இருக்கும் பல்லவர்கள் கால சிற்பங்கள், குகைக் கோயில்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை இரு தலைவர்களும் பார்வையிடுகின்றனர்.
சீன அதிபரின் வருகைக்காக சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சீன அதிபரின் பயணத்திற்காக, சென்னையின் போக்குவரத்து 11 மற்றும் 12ம் தேதிகளில் மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், “சென்னை ஜி.எஸ்.டி சாலை (விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணாசாலை (கத்திப்பாரா முதல் சின்னமலை வரை), சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளது.
எனவே மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பயணதிட்டத்தையும் வழித்தடங்களையும் முன்னேற்பாடு செய்துகொள்ளவேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!