Tamilnadu
கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் இருந்த டி.வி-யை எடுத்து தெருவில் உடைத்த திருடன் : ஏன் இவ்வளவு ஆத்திரம்?
தமிழகத்தில் சமீபகாலமாக கொள்ளையடிக்கச் செல்லும் திருடர்கள், திருடச் சென்ற இடத்தில் பணம் நகை இல்லையென்றால் ஆத்திரத்தில் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்துவதையோ சுவரில் திட்டி எழுதுவதையோ வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கடந்த மாதம் நெய்வேலியில் கொள்ளையடிக்கச் சென்ற திருடன் கடையில் பணம் இல்லாததால் விரக்தியில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு பொருட்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளான்.
அதனையடுத்து, வாணியம்பாடியில் பூட்டிக் கிடந்த வீட்டுக்குள் நுழைந்து, நூதன முறையில் 50 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த திருடன், அந்த வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டுச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது இப்படியான ஒரு நூதன வேலையில் திருடன் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் வடிவேல் நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது வீட்டிற்கு திருடச் சென்ற திருடன் பீரோவில் இருந்த ஐந்து சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிக்க முயன்றுள்ளான்.
அப்போது அருகில் இருந்த வீட்டில் யாரும் இல்லாதததை அறிந்த திருடன், அந்த வீட்டிலும் திருடுவதற்காக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளான். ஆனால் அந்த வீட்டில் பணம், நகை எதுவும் கிடைக்காததால் ஆத்திரத்தில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டி.வி-யை எடுத்து வீதியில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டான்.
இதனையடுத்து சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலிஸார், திருடன் முகத்தில் துணிகட்டி மறைத்திருந்ததால் அவனை அடையாளம் காணமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருடன் கொள்ளையடிக்கச் சென்ற வீட்டின் அருகில் உள்ள வீட்டின் கதவுகளையும் வெளியில் தாழிட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது. நகைகளை பறிகொடுத்த வீட்டினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!