Tamilnadu
இந்தி திணிப்பு : ”மிரட்ட வேண்டாம்.. இது சிறுத்தைகள் கூட்டம் ! ” - அமித்ஷாவை எச்சரித்த துரைமுருகன்
தி.மு.க-வின் முப்பெரும் விழா பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள் இணைந்து முப்பெரும் விழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழா இந்த ஆண்டு திருவண்ணாமலையில் மிகவும் பிரமாண்டமாக மாநாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கலந்துக்கொண்டு பேசியதாவது, "இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்ற இரண்டு கட்சிகளில் ஒன்று காங்கிரஸ் கட்சி மற்றொன்று திராவிட இயக்கம் தான். அதில் திராவிட இயக்கம் தற்போதும் கம்பீரமாக வீரநடை போடுவது நமது திராவிட இயக்கம் தான்.
அதனால் இங்கு உள்ள தி.மு.கவினருக்கு எதிர்காலமாக திகழும் உங்களுக்கு மிகப் பெரிய கடமை உள்ளது. இது உங்களுக்கு விடப்பட்டுள்ள சவால். இந்த சவாலை நிச்சயமாக நீங்கள் வெற்றி அடைவீர்கள். ஆரம்பக்காலத்தில் இந்தி திணிப்பு இருந்தபோது அப்போது முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு திருவண்ணாமலையில் தான் நடைபெற்றது. அதே திருவண்ணாமலையில் இருந்து அமித்ஷாவின் குரலுக்கு பதில் செல்லவேண்டிய கட்டாயம் இந்த மாநாடுக்கு எழுந்துள்ளது.
ஒரு மொழிதான் இருக்கவேண்டும் என்றால், மற்ற மொழி பேசுபவர்கள் எல்லாம் அடிமையாக எடுபிடியாக மாறவேண்டும் என்ற நிலைமை உருவாகியிருக்கும். அந்த நிலைமை இங்கு செல்லாது. என் ஏன்றால் இது தமிழ்நாடு. தந்தை பெரியார் பிறந்த மண், அறிஞர் அண்ணா ஊட்டிய உணர்வு, கலைஞர் வாழ்ந்த மண், எங்கள் தலைவர் உயிரோடு இருக்கின்ற காலத்தில் வெல்லப்போகிற மகத்தான சவால். மிரட்டிப்பார்க்கிறீர்களா..? இது சிறுத்தைகள் கூட்டம் ஜாக்கிரதை” என்று எச்சரித்தார்.
Also Read
-
"தமிழுக்கு துரோகம் செய்யும் பாஜகவுக்கு கொத்தடிமையாகக் கிடப்பது அதிமுகவின் பழக்கம்" - முரசொலி காட்டம் !
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !