Tamilnadu
குடிநீர் திட்டத்துக்காக முதல்வர் ஏன் இஸ்ரேல் செல்ல வேண்டும்? தமிழக வல்லுநர்களே போதுமே: கலாநிதி வீராசாமி!
"தமிழகத்தில் உள்ள வல்லுநர்களை வைத்தே குடிநீர் திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தலாம். இதற்காக எதற்கு முதல்வர் இஸ்ரேல் செல்ல வேண்டும்?" என வடசென்னை மக்களவைத் தொகுதி எம்.பி. கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பள்ளியை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “குடிநீர் திட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள திறமையான வல்லுநர்களை வைத்தே தீர்வு காணலாம், அவர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் குடிநீர் சேமிப்புத் திட்டத்துக்காக முதலமைச்சர் பழனிசாமி இஸ்ரேல் செல்வதெல்லாம் தேவையற்றது.” என கூறியுள்ளார்.
மேலும், இனிமேல் ஆட்சியில் இருக்கப்போவதில்லை என்பதை அறிந்து ஊர் சுற்ற வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி பயணங்களை பழனிசாமி உள்ளிட்ட அமைச்சரவை சகாக்கள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.
”வெளிநாடுகளுக்கு பயணம் செல்வது தற்போது ஃபேஷனாகிவிட்டது. இவர்களது வெளிநாட்டு பயணத்தால் எந்த பயனும் வந்துவிடும் என்பதில் நம்பிக்கை இல்லை” என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் குறித்து பேசிய கலாநிதி வீராசாமி, ”டெங்கு காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனையில் அதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
“கடந்த முறை டெங்கு காய்ச்சல் பரவியபோது, போதிய மருந்துகள் மற்றும் வசதிகள் இல்லாததால் அதிகம் பேர் மரணித்தனர். ஆகையால் இந்த முறை அது போல நிகழாமல் இருக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும், “ஒரே நாடு ஒரே ரேஷன் குறித்த பேசிய கலாநிதி வீராசாமி, ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அனைவரையும் அனுமதித்துவிட்டால் எதிர்காலத்தில் தமிழர்களுக்கே தமிழகத்தில் இடமில்லை என்ற நிலை உருவாகிவிடும். ஆகையால், அவ்வாறு குடியேறுபவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர் உரிமை வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ்ப் பெண்களை, வெல்லும் பெண்களாக மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்