Tamilnadu
”தமிழ்நாட்டுக்கு வீண் பாரமாக இருப்பது யார் என மக்களுக்குத் தெரியும்”- எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த கனிமொழி
தமிழ்நாட்டுக்கு வீண் பாரமாக இருப்பது யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியும் என்று செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க எம்.பி கனிமொழி, முதல்வர் எடப்பாடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அடிமை அ.தி.மு.க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் களத்தில் இறங்கி மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், அதை விளம்பரம் என்று சொல்லி விமர்சித்து இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இந்த விவகாரத்தில் ஸ்டாலின் விளம்பரம் தேட வேண்டியது இல்லை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். தமிழக மக்களின் நம்பிக்கையாக மு.க ஸ்டாலின் மாறி இருக்கிறார். ஆனால், இதுவரை முதல்வர் ஏன் நீலகிரி சென்று மக்களை சந்திக்கவில்லை இந்த கேள்விக்கு எடப்பாடியால் பதில் சொல்ல முடியுமா? “ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “ நாடாளுமன்றத்தில் பா.ஜ.க கொண்டு வரும் மக்கள் விரோத மசோதாக்களை ஆதரித்தால் மட்டும் போதாது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த நிவாரணத்தையும் மத்திய அரசிடம் பேசி வாங்கித் தர வேண்டும்.
பா.ஜ.க.,வின் வலது கையாக இருப்பதை விடுத்து தமிழகத்திற்கு தேவையான விஷயங்களை செய்ய அ.தி.மு.க முன் வர வேண்டும். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பற்றி முதல்வர் இவ்வளவு கீழ்த்தரமாக பேசியிருக்கிறார். இது தவறான செயல்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது? அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று எடப்பாடி குறிப்பிட்டிருந்தார். இது பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!