Tamilnadu
நெல்லையில் பயங்கரம்! - முன்னாள் தி.மு.க. மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் வெட்டிக் கொலை!
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட மூவர் வெட்டிக்கொலை.
திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயராக 1996 முதல் 2001ம் ஆண்டு வரை உமா மகேஸ்வரி தி.மு.க சார்பில் பணிபுரிந்தார். நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிரணி பொறுப்பாளராக இருந்துள்ளார்.
இன்று மாலை ரெட்டியார்பட்டியில் உள்ள உமா மகேஸ்வரியின் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்களால் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகிய மூவர் வெட்டிக்கொல்லப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளன. சொத்துப் பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின்றன. இந்த கொலை சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?