Tamilnadu
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!
17-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரிக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் ஆளுங்கட்சியினரின் முறைகேடு காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தேதியை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவும், ஆகஸ்ட் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
ஜூலை 11-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் எனவும் ஜூலை 18-ல் மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள், வேட்பு மனு பரிசீலனை ஜூலை 19-ம் தேதியும், மனுத்தாக்கல் வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 22-ம் தேதி எனவும் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!