Tamilnadu
நாளையும், நாளை மறுதினமும் தமிழகத்தில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் கோடை வெயில் இன்னும் முடிவுறாமல் மக்களை அதிகம் வாட்டி வதைக்கிறது. மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம். மக்கள் அன்றாட தேவைக்காக தண்ணீர் தேடி அலைகின்றனர். பல மாவட்டங்களில் தண்ணீர் இல்லாததாதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளிவந்த ஆய்வில் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது,"தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அடுத்த சில நாட்களில் தென் மேற்கு பருவமழை வலுப்பெறும், என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது, இந்தியாவின் 15 சதவீத இடங்களில் மட்டுமே, பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதாகவும், இது வழக்கத்தை விட குறைவு எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
கேரளா, கர்நாடகாவின் தென்பகுதி மற்றும், தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டுமே பெய்துவரும் மழை, மற்ற இடங்களுக்கும் பரவ, இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிராவில், வரும் 25ம் தேதி வாக்கிலும், நாட்டின் மத்திய பகுதிகளில் ஜூன் கடைசி வாரத்திலும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்றுடைய தினம் பல இடங்களில் திடீரென பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!