Tamilnadu
மக்கள் கருத்துகளைக் கேட்டபிறகுதான் அணுக்கழிவு மையமா? : அமைச்சரின் வேடிக்கைப் பேச்சு!
நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுகிறது. இந்த அணுமின் நிலையம் செயல்படுவதற்கு முன்பே எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், அணுமின்சாரத்தின் மூலம் உருவாகும் அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவது குறித்து மத்திய அரசு எந்தவித முடிவுகளையும் எடுக்காமல் இருந்துவந்தது.
எந்த மாநிலத்திலும் அணுக்கழிவு மையம் அமைக்க அனுமதி மறுத்துள்ள நிலையில், தற்போது தேர்தல் முடிந்த பிறகு அணுக் கழிவுகளை கூடங்குளத்திலேயே அமைப்பது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு எடுத்துவருகிறது. இதுகுறித்து அடுத்தமாதம் ஜூலையில் ஆலோசனைக் கூட்டமும், கருத்துக்கேட்பு கூட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அமைச்சர் கருப்பணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, “கூடங்குளத்தில் மக்களின் கருத்துகளைக் கேட்ட பின்பே அணுக்கழிவு மையம் அமைக்கப்படும். மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு எடப்பாடி அரசு ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை திட்டம், உயர்மின்னழுத்த கோபுரம் அமைப்பது என தொடர்ந்து மக்களுக்கு எதிராக எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி வந்துள்ளது. இந்த திட்டங்களைக் கொண்டுவரும்போதெல்லாம் மக்களிடம் கருத்து கேட்பதாக மாநில அரசு கூறுகிறது. அந்த திட்டதையெல்லாம் மக்களும் எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு, எடப்பாடி அரசு கைப்பாவையாக செயல்படுகிறது. இந்த அ.தி.மு.க அரசு மக்களிடம் கருத்துக் கேட்போம் என்று கூறுவது மக்களை ஏமாற்றுவதற்குத் தான் என தெளிவாக தெரிகிறது. மக்களின் தொடர் போராட்டங்களினால் இதுநாள் வரையும் எந்த திட்டத்தையும் கைவிடவில்லை. மோடி அரசு பார்த்துக்கொள்ளும் என தமிழக நலன்களுக்கு எதிராக அ.தி.மு.க அரசு செயல்படுகிறது.
கூடங்குளத்தில் மக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகே அணுக்கழிவு மையம் அமைக்கப்படும் என தமிழக அமைச்சர் கருப்பணன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. எந்தத் திட்டதிற்கும் அரசு மக்கள் கருத்துகளைக் கேட்டுச் செயல்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!