Tamilnadu
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பள்ளிகள் இயங்கும்?
தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக பல இடங்களில் தொடந்து பள்ளிகளை இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பள்ளிகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. ஆனால், இதுதொடர்பாக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மேலும் 3, 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கப்படாததன் காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க முடியவில்லை என்றும் கூறி உள்ளனர்.
இது தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளி இயக்குனரிடம் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!