File Image
Tamilnadu

“ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மக்களவையில் குரல் கொடுப்பேன்” : நாகை எம்.பி உறுதி!

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு, தான் நாடாளுமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

புதிதாக நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி எம்.பி-யாக தேர்வாகியுள்ள செல்வராசு பேசுகையில், “டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.” என உறுதியளித்துள்ளார்.

மேலும், பயிர்க் காப்பீட்டு திட்டம் தனியாரிடம் விடப்பட்டுள்ளதால் முழுமையான அளவில் காப்பீட்டு தொகை கிடைக்காத நிலை இருக்கிறது. அதை மாற்றி, பாதிக்கப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்கப் பாடுபடுவேன் என்றார்.

நாகப்பட்டினம் துறைமுகத்தை தரம் உயர்த்தவும், வேதாரண்யம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் சிறு துறைமுகங்கள் அமைக்கவும், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கப் பாடுபடுவதாகவும் உறுதியளித்துள்ளார் செல்வராசு எம்.பி.,