Tamilnadu
“கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அயராது உழைப்போம்” : கரூர் எம்.பி. ஜோதிமணி!
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளை வென்றுள்ளது. இதில் 23 தொகுதிகளில் தி.மு.க. வென்று நாட்டிலேயே மிகப்பேரிய கட்சிகளின் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் கரூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரத்து 546 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் தம்பிதுரையை தோற்கடித்து வெற்றியை தனதாக்கியுள்ளார்.
இதனையடுத்து, கரூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் ஜோதிமணி.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
தி.மு.க தலைமையில் சந்தித்த தேர்தலில் கரூர் தொகுதியின் வெற்றிக்காக இரவு, பகல் பாராமல் அயராது உழைத்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கும் கூட்டணி சகாக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு வாக்கும் தன் மீது வைத்திருந்த மகத்தான அன்பும், நம்பிக்கையும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். அந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை காணிக்கையாக்குகிறேன். தேர்தல் பிரசாரத்தின் போதும், தேர்தல் அறிக்கையிலும் அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவதற்காக கடுமையாக உழைப்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!
-
“ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!