Tamilnadu
இலவச - கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1,20,989 பேர் விண்ணப்பம்!
இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலவச - கட்டாய கல்வி சட்டத்தை கொண்டுவந்தது.
இந்தச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பள்ளிகளுக்கு அங்கீகாரம், ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம், பள்ளி வளர்ச்சி, கல்வி மேம்பாடு உள்பட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் ஆகியோருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை பெறுவதற்கு விண்ணப்பம் ஆன்லைனில் நடைபெற்றது. கடந்த மாதம் 22 ம் தேதி துவங்கி மே 19 தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் 1 லட்சத்து 21 ஆயிரம் இடங்கள் உள்ளன். அதற்கு 1 லட்சத்து 20 ஆயிரத்து 989 பேர் விண்ணப்பித்துள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுவரை நேரடியாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்க்க அரசு திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!