Tamilnadu
பேரறிவாளனை தமிழக அரசு விடுதலை செய்ய தயங்குவது ஏன்?- அற்புதம்மாள் கேள்வி !
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழு பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், பேரறிவாளன் விடுவிக்கப்படாதது வேதனை அளிப்பதாக கூறினார். தமது மகனின் விடுதலை தொடர்பாக, ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் அற்புதம்மாள் குறிப்பிட்டார்.
மேலும், மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இந்தி நடிகர் சஞ்சய் தத்தை, மகாராஷ்டிர மாநில அரசு, விடுதலை செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்று, பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு தயங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !