Tamilnadu

விழுப்புரம், புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி; சூழலியாளர்கள் எதிர்ப்பு

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 55 புதிய இடங்களுக்கு மத்திய அரசு டெண்டர் விட்டது. அதில் தமிழகத்தில் உள்ள 3 இடங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த மூன்று இடங்களில் நிலப்பரப்பு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கும், கடற்பரப்பை வேதாந்தா நிறுவனத்துக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இது போன்ற அனுமதி வழங்கப்படுவது சட்டவிரோதமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதன் மூலம், மாநிலத்தின் நிலப்பரப்பு அழியும் அபாயத்திற்கு சென்று விடும் என்றும் கூறியுள்ளார்.