Tamilnadu
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை : போலீஸ் விசாரணையில் அம்பலம் !
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகள் விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விற்பனை தொடர்பாக, ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விவரங்கள் குறித்த மாவட்ட சுகாதாரத்துறையின் அறிக்கை சிபிசிஐடியிடம் இன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்த உள்ளனர்.
முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அமுதவள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், குழந்தை விற்பனை மூலம் பெறப்பட்ட ரூ.1,00,000 கைப்பற்றப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் ஒரு குற்றவாளி இன்று (10.05.2019) கைது செய்யப்பட்டார். இதுவரை மேற்கொண்ட விசாரணையில், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 24 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Also Read
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!