Tamilnadu
சிசிடிவி கேமரா-வில் குளறுபடி: கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆவேசம்!
கரூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கரூர் தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் செயல்பட்டு வரும் சிசிடிவி கேமரா 2 மணி நேர வித்தியாசத்தில் இயங்கி வருவதாக வந்த புகாரினை அடுத்து, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி நேற்று முன்தினம் அந்த வளாகத்தை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோதிமணி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்டிராங் அறையில்' செயல்பட்டு வரும் கண்ணாணிப்பு கேமரா 2 மணிநேரம் கூடுதல் வித்தியாசமாக செயல்படுவதாக எங்கள் முகவர் தெரிவித்தார். அதன் பின்னர் மே 3ம் தேதி இரவு 11.30-க்கு அந்த பகுதியில் பார்வையிட்டோம் ஆனால் அதில் பதிவான நேரம் 1.40. கிட்டத்தட்ட 2 மணிநேரம் கூடுதலாக கண்காணிப்பு கேமரா செயல்படுகிறது. அப்படியென்றால் அதை பயன்படுத்தி குளறுபடி செய்யவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துளோம். இங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார். பின்னார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!