Tamilnadu
3 மெட்ரோ ரயில்ஊழியர்கள் சஸ்பெண்ட் - எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் நிர்வாகம்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முடக்கியதாக மேலும் மூன்று ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது மெட்ரோ ரயில் நிர்வாகம்.
தொழிற்சங்கம் தொடங்கியதாக மெட்ரோ ஊழியர்கள் 8 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் நீக்கத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரி மெட்ரோ ரயில் ஊழியர்கள் 2 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து நேற்று முத்தரப்பு பேச்சு வார்த்தை சென்னை எழிலகத்தில் நடைபெற்றது. அதில் சுமூக முடிவு ஏதும் எட்டப்படாததால், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், ஊழியர்களை மேலும் கொந்தளிக்கச் செய்யும் விதமாக மனோகரன், பிரேம்குமார், சிந்தியாரோஷன் ஆகிய மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இரண்டாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை பாரிமுனையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன்,மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பினர்,சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராஜன், ஆகியோர் பங்கேற்றுள்ளனர்பண்
Also Read
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?
-
கனிமொழி எம்.பி-யின் ஒற்றைப் பதிவு.. சமூக வலைதளங்களில் படு வைரல்!
-
“தவெக பெயரை குறிப்பிடாதது ஏன்?” - பண மோசடியில் சிக்கிய வர்ஷினி வெங்கட் விவகாரத்தில் திமுக கேள்வி!
-
“இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி வகிக்க ஞானேஷ் குமார் தகுதியற்றவர்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம்.. ஆனால்.. செப். 27 ஞாயிற்றுக்கிழமை இயங்கும்.. நிதியமைச்சகம் அறிவிப்பு!