Tamilnadu
ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது!
வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு உத்தரவை ரத்து செய்ய கோரியும், ஆலையை மூட பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது,
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நீண்ட நாட்களாக ஆலை மூடியிருப்பதால்,ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், ஆதலால் தற்காலிகமாக ஆலையை பராமரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும், நிர்வாக வசதிக்கும், பராமரிப்புக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் தரப்பில் கோரப்பட்டது..
அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,ஸ்டெர்லைட் ஆலை முழுக்க முழுக்க தற்போது அரசு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை மாவட்ட உதவி ஆட்சியர் தலைமையிலான குழு கண்காணித்து வருவதாகவும், ஆலையை கண்காணிக்க தங்களிடம் நிபுணத்துவம் பெற்றவர்கள் உள்ளதாகவும்,ஆலையில் என்ன நடந்தாலும் அதற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்கும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்திய நாராயணன்,நிர்மல் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ஆலையை பராமரிக்க அனுமதி அளிக்க வேண்டும், அல்லது பாராமரிப்பை கண்கானிக்க குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது
அதற்கு பதிலளித்த அரசு தரப்பு நிர்வாக காரணங்கள், பராமரிப்பு என ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விதமாக அதே கோரிக்கையை ஸ்டெர்லைட் தரப்பு முன்வைப்பதாகவும், எந்த வகையிலும் அதற்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் தெரிவித்தத
ஸ்டெர்லைட் ஆலை தரப்பில், ஆலையை திறக்காமல் இருப்பதால் பல தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள், அவர்களின் சிலர் ஆலை திறக்க வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் அந்த வழக்குகளை விசாரித்து உத்தரவு பிறபிக்க கோரினர்.
இந்த வாதங்களை கேட்ட் நீதிபதிகள், கோடை விடுமுறைக்கு பின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடர்பட்ட வழக்குகளை விசாரிப்போம் என கூறி வழக்கை ஜீன்11 ம் தேதி ஒத்தி வைத்தனர்
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!