Tamilnadu
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்திற்குப் பதிலாகத் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
தமிழகத்தில் உள்ள 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன. அவற்றிற்கான கலந்தாய்வு 2-வது ஆண்டாக ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 2-ம் தேதி துவங்கி மே 31-ம் தேதி வரை கலந்தாய்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். www.tnea.ac.in மற்றும் ww.annauniv.edu என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. அரசு அமைத்துள்ள உதவி மையங்களில் ஜூன் 6 முதல் 11-ம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
ஜுன் 17-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 20, 21, 22 ஆகிய தேதிகளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூலை 3-ம் தேதி துவங்கி ஜூலை 30-ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதற்காக தமிழகத்தில் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி மையங்கள் வாயிலாகவும், வீட்டிலிருந்தபடியும் மாணவர்கள் கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!