Tamilnadu
3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகளின் விவரம் !
தமிழகத்தில் வேலூர் அல்லாத, 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நண்பகல் 1 மணி வரையிலான நிலவரப்படி தமிழகம் முழுவதும் 39.49% ஆக வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56% வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 % வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்தார். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56.85% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 55.97% வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும்,தெரிவித்தார்.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!