Sports
World University Games: பங்கேற்கும் 12 தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.32.25 லட்சம் வழங்கினார் துணை முதல்வர்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து ஜெர்மனியில் நடைபெற உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொள்ள 12 வீரர், வீராங்கனைகளுக்கு 32.25 இலட்சம் ரூபாய்க்கான காசலோலைகள் மற்றும் 9 வீரர், வீராங்கனைகளுக்கு 4.80 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டினை விளையாட்டில் முன்னோடி மாநிலமாக உருவாக்கிட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை ஏற்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்கான தங்குமிட கட்டணம், விமான கட்டணம், உணவு, அனுமதிக்கட்டணம் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ள நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயன்படுத்த விளையாட்டு உபகரணங்களும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவி மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஜெர்மனியில் 16.7.2025 முதல் 27.7.2025 வரை நடைபெறவிருக்கும் உலக அளவில் பல்கலைகழகங்களுக்கு (World University Games) இடையேயான FISU விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை செல்வி ஏன்ஜெல் சில்வியா, வீரர்கள் செல்வன் ஜெரோம், செல்வன் அஸ்வின் கிருஷ்ணன், செல்வன் ரீகன், கூடைப்பந்து வீரர் செல்வன் சங்கீத் குமார், வீராங்கனை செல்வி தேஜஸ்ரீ, செல்வன் சுகந்தன், கையுந்துபந்து வீராங்கனைகள் செல்வி ஆனந்தி, செல்வி சுஜி, செல்வி கனிமொழி, வீரர் செல்வன் அபிதன், வாள்வீச்சு வீராங்கனை செல்வி கனகலக்ஷ்மி என 12 வீரர், வீராங்கனைகளுக்கு செலவினத்தொகையாக மொத்தம் 32.25 இலட்சம் ரூபாய்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து இன்று (14.5.2025) வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து நீச்சல் வீராங்கனை செல்வி ஸ்ரீ காமினி, இறகுப்பந்து வீராங்கனை செல்வி ஜனாக்க்ஷி, தடகள வீரர் செல்வன் வாசன், செல்வன் யுகேந்திரன், வீராங்கனைகள் செல்வி ஸ்வேதா, செல்வி ஸ்ரீரேஷ்மா, கேரம் வீராங்கனைகள் செல்வி ஹரினி, செல்வி காவியா என 9 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 4.80 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன விளையாட்டு உபகரணங்களை துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
Also Read
-
பீகார் - வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முறை ஆபத்தானது : இந்திய தேர்தல் ஆணையம் மீது தேஜஸ்வி புகார்!
-
”கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது” : அமர்நாத் ராமகிருஷ்ணன் !
-
”இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
”இது நாங்கள் உருவாக்கிய கூட்டணி” : எடப்பாடி பழனிசாமிக்கு தொல்.திருமாவளவன் பதிலடி!
-
”ஓரணியில் தமிழ்நாடு” கைகோக்கும் குடும்பங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!