Sports
பாகிஸ்தான் மைதானப் பராமரிப்பாளர்களுக்கு படிப்பறிவேயில்லை - சென்னையை குறிப்பிட்டு பாக்.வீரர் விமர்சனம் !
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக செயப்பட்ட இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்டுகளும், ஜடேஜா 5 விக்கெட்டுகளும், பும்ரா 5 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். மேலும் அஸ்வின், கில், பண்ட் ஆகியோர் சதமடித்தும் அசத்தினர். மேலும் இந்த போட்டியில் சேப்பாக்கம் மைதானமும் சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதாக பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மைதானப் பராமரிப்பாளர்களுக்கு படிப்பறிவேயில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாஸித் அலி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “ சென்னை டெஸ்டில் இந்தியா இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. ஏனெனில், பந்து நிச்சயம் திரும்பும் என்பது அவர்களுக்கு தெரியும்.
மைதானத்தைப் பார்க்கும்போது அது தெரியாவிட்டாலும் போட்டியிலும் அதுதான் நடந்தது. இதற்காக அந்த பிட்ச்சை தயாரித்தவர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இந்தியர்களுக்கு டெஸ்ட் போட்டிக்கான பிட்ச்சை எப்படி உருவாக்க வேண்டும் என்பது தெரிந்து இருக்கிறது.
ஆனால் இங்குள்ளவர்களுக்கு அது குறித்து எதுவும் தெரியவில்லை. இங்குள்ள மைதானப் பராமரிப்பாளர்களுக்கு படிப்பறிவேயில்லை. வீரர்களுக்கும் மைதானம் குறித்த அறிவு இல்லை. ஒரு பிட்ச்சை குறித்து தெரிந்து கொண்டாலே 50 சதவீத சிக்கல்கள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இங்கு அது குறித்து யாருக்கும் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!