Sports
"எனது குறைகளை சரிசெய்ய முயன்று வருகிறேன், கேப்டனாக சாதிப்பேன்" - சுப்மான் கில் உறுதி !
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 போட்டியில் சிறப்பான செயல்பட்ட சுப்மான் கில் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த கில் கடந்த 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தை தக்கவைத்த கில், மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக மாறியுள்ளார். அதிலும் கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்ததோடு, அதே மாதம் டி20 போட்டியிலும் சதம் விளாசி இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
கடந்த 50 உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், முதல் முறையாக ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார். தொடர்ந்து அடுத்ததாக நாளை துவங்கும் 2024 துலீப் கோப்பையில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில் களமிறங்க உள்ளார்.
இந்த நிலையில் சுப்மான் கில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் "ஸ்பின்னர்களுக்கு எதிராக என்னுடைய டிஃபென்ஸில் முன்னேற்றம் அடைந்துள்ளேன். தற்போது நிறைய டி20 போட்டிகள் விளையாடப்படும் நிலையில் பிட்ச்கள் பேட்டிங்க்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்களின் தடுப்பாட்டம் கொஞ்சம் பாதிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய செயல்பாடுகள் இதுவரை எதிர்பார்ப்புக்கு நிகராக இல்லை என்பது உண்மைதான். அதனை சரிசெய்ய முயன்று வருகிறேன். கேப்டன் வீரர்களுடன் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அவர்களின் பலம் பலவீனங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது தான் கேப்டன் அல்லது துணை கேப்டனாக இருக்கும் போது என்னிடம் உள்ள சிறிய மாற்றமாகும். எதிர் வரும் துலீப் கோப்பையில் கேப்டனாக சிறப்பான பங்களிப்பை அளிப்பேன் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
-
“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !