Sports
அஸ்வினுக்கு அடுத்த இந்திய அணியின் எதிர்கால வீரர் இவர்தான் - தமிழ்நாடு வீரரை கைகாட்டிய தினேஷ் கார்த்திக் !
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான திகழ்ந்து வருகிறார்.
இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான இவர் தற்போது வரை இந்திய அணியில் நீடித்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர் என சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒதுக்கப்பட்டார் அஸ்வின்.
எனினும் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறனை வெளிப்படுத்தி கடந்த உலகக்கோப்பை டி20 தொடர், மற்றும் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் என இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தினார். அதிலும் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாகவே செயல்பட்டார்.
தற்போது 37 வயதாகும் அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்காலகட்டத்தில் உள்ளார். இதனால் அவருக்கு பின் இந்திய சுழற்பந்து வீச்சை தாங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் அஸ்வினுக்கு அடுத்த ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளர் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர்தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “அஸ்வினுக்கு அடுத்து எதிர்கால தலைமுறைக்கான ஆஃப் ஸ்பின்னரை இந்திய அணி நிர்வாகம் தேடி வருகிறது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் புல்கிட் நரங், சரன்ஷ் ஜெய்ன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 ஆஃப் ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
என்னை பொறுத்தவரை இந்த 3 பேரில், வாஷிங்டன் சுந்தர் முன்னிலையில் இருக்கிறார். இந்திய அணிக்காக இதுவரை தனக்கு கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் என்ன செய்ய முடியுமோ அதனை சிறப்பாக செய்திருக்கிறார். அதனால் ஆஃப் ஸ்பின்னராக முதன்மை வாய்ப்பு அவருக்கே கிடைக்கும்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!