Sports
"அதை இன்னும் மறக்கமுடியவில்லை" - T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நினைத்து புலம்பும் தென்னாபிரிக்க வீரர் !
நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் முன்னேறின. வலுவான இரண்டு அணிகள் மோதிய போட்டியில் யார் வெல்வார்கள் என்ற கேள்வி எழுந்தது.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது . பின்னர் ஆடிய தென்னாபிரிக்க அணி சிறப்பாக ஆடியது. இறுதி கட்டத்தில் அந்த அணிக்கு 30 பந்துகளில் 30 ரன்களே வெற்றிக்கு தேவை பட்டது.
ஆனால் அங்கிருந்து சிறப்பாக ஆடிய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் வெற்றியின் விளிம்பில் இருந்து தென்னாபிரிக்க அணி தோற்றது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உலககோப்பை இறுதிப்போட்டி தோல்வியை நினைத்துப் பார்க்காமல் இருக்கவே விரும்புகிறேன் என தென்னாபிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "டி20 உலகக் கோப்பை இறுதி போட்டி தோல்வியை மறக்க முடியவில்லை. அதன் நினைக்கவேண்டாம் முடிவை என்று நினைக்கிறோமோ, அப்போது அதைப்பற்றி பேசுகிறார்கள்.
என்னால் முடிந்தவரை அதை மறப்பதற்கு நினைக்கிறேன். ஆனால், அது அத்தனை எளிதாக இல்லை. ஒரு நாள் இரவு, யாரோ ஒருவர் அதைப் பற்றி என்னிடம் பேசினார். நீங்கள் எங்களுக்காக வருத்தம் அடைந்தால், அதை எங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது போல இருந்தது. சில விஷயங்களை நாம் நினைத்துப் பார்க்காமல் இருக்கவே விரும்புவோம்." என்று கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!