Sports
உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல்முறை : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்க-: ஆப்கான் பரிதாப தோல்வி!
நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து போன்ற வலிமையான அணிகள் இருந்த பிரிவில் ஆப்கானித்தான்அணி இடம்பெற்றிருந்தது.
எனினும் வலிமையான நியூஸிலாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிராக அந்த அணி தோல்வியை சந்தித்தது. எனினும் அடுத்து நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் உலகக்கோப்பை தொடர்களில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றிபெற்று அபார சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து வங்கதேச அணியையும் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிருதிக்கு முன்னேறி சாதனை படைத்தது.
அதே போல தென்னாப்பிரிக்க அணியும் வெற்றிபெற வேண்டிய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அரையிருதிக்கு முன்னேறியது. இந்த சூழலில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.
இதில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஆப்கானிஸ்தான் அணியால் 56 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது ஓவரிலேயே டீ காக்கின் விக்கெட்டை இழந்தது. எனினும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்க அணி 9-வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தென்னாபிரிக்கா அணி உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?