Sports
"கிரிக்கெட்தான் எங்கள் மக்களுக்கான ஒரே சந்தோஷம்"- ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் உருக்கம் !
நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து போன்ற வலிமையான அணிகள் இருந்த பிரிவில் ஆப்கானித்தான்அணி இடம்பெற்றிருந்தது.
எனினும் வலிமையான நியூஸிலாந்து அணியை வீழ்த்திய ஆப்கானித்தான்அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிராக அந்த அணி தோல்வியை சந்தித்தது. எனினும் அடுத்து நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் உலகக்கோப்பை தொடர்களில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றிபெற்று அபார சாதனை படைத்தது. கடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை போன்ற முன்னணி அணிகளையும் ஆப்கானித்தான் அணி வீழ்த்தியிருந்தது.
இந்த நிலையில் , கிரிக்கெட்தான் எங்கள் மக்களுக்கான ஒரே சந்தோஷம் என ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷீத் கான் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் பேசிய ரஷீத் கான், "எங்களுடைய தேசமும் எங்களுடைய மக்களும் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய வெற்றி இது. மிகப்பெரிய அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனைதான்.
எங்களின் வெற்றி ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது. கிரிக்கெட்தான் எங்கள் மக்களுக்கான ஒரே சந்தோஷமாக இருக்கிறது. அத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் இளைஞர்களின் கவனத்தை கிரிக்கெட்டை நோக்கித் திருப்புகிறது. அவர்களுக்கு அந்த சந்தோஷத்தை எங்களால் கொடுக்க முடிவதில் மகிழ்ச்சி. நான் விக்கெட்டுகள் எடுப்பதைவிட எங்கள் மக்கள் தெருக்களில் கொண்டாடி மகிழும்போது அவர்களின் முகத்தில் இருக்கும் சிரிப்பே எனக்கு பெரும் திருப்தியைக் கொடுக்கிறது. அதுதான் எனக்கு மாபெரும் ஊக்கமாக இருக்கிறது"என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!