Sports
மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற KKR : 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை வென்று அசத்தல் !
கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் விருந்து படைத்து வந்த ஐபிஎல் 2024 ஆம் ஆண்டின் இறுதிப்போட்டி இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் தகுதி பெற்றன.
இதில் இறுதிப்போட்டிக்கு முன்னாள் சாம்பியங்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முன்னேறின. இந்த இறுதிப்போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து வந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்களை கூட முழுமையாக ஆடாமல் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் ஆடிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி 10.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஏற்கனவே கொல்கத்தா அணி 2012, 2014ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியிருந்தது.
பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு கோப்பையுடன் 20கோடி ரூபாய் பரிசுத்தொகையும், 2வது இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு 13கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. தொடரின் சிறந்த வீரர் விருது கொல்கத்தா வீரர் நரைன்க்கும், அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பி விராட் கோலிக்கும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கான பர்பிள் தொப்பி ஹர்ஷல் படேலுக்கும் வழங்கப்பட்டது.
Also Read
-
வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு; ராசிபுரத்தில் டைடல் பூங்காவுக்கு அடிக்கல்: சாதனை படைத்த தமிழ்நாடு!
-
சென்னையில் ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை... வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் !
-
திருச்செங்கோடு மக்களுக்கு அடித்த ஜாக்பாட்... மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை... புதிய வசதிகள் என்ன ?
-
100 இடங்களில் வாக்காளராக இருந்த பெண்... ஹரியானா தேர்தலில் குளறுபடிகளை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி !
-
மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !