Sports

டி20 உலகக்கோப்பை தேர்வு செய்யப்படாவிட்டால் நான் இதைதான் செய்வேன் - இளம்வீரர் கில் கருத்து !

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 போட்டியில் சிறப்பான செயல்பட்ட சுப்மான் கில் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த கில் கடந்த 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தை தக்கவைத்த கில், மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக மாறியுள்ளார். அதிலும் கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்ததோடு, அதே மாதம் டி20 போட்டியிலும் சதம் விளாசி இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

தற்போது முடிவடைந்த உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், முதல் முறையாக ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார். தொடர்ந்து ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் சுப்மான் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். எனினும் அடுத்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் அணியில் இடம்பெறுவாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தேர்வு செய்யப்படாவிட்டாலும் கூட, நான் இந்திய அணி வெல்வதற்காக இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவேன் என சுப்மான் கில் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " ஐபிஎல் தொடரில் எனக்கு ஒரு குறிப்பிட்ட பங்கும் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இப்போது எனது முன்னுரிமை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகானதை செய்வது மட்டுமே.

டி20 உலகக்கோப்பையில் நான் தேர்வு செய்யப்படுவேனா என்பது குறித்து நான் யோசிக்கவில்லை. ஒரு வீரராக என்னுடைய அணிக்கு ரன் குவிப்பதை பற்றி மட்டுமே யோசித்து வருகிறேன். உலகக்கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எப்பொழுதும் ஒரு கனவாகும். நான் இந்த முறை டி20 உலகக்கோப்பை தேர்வு செய்யப்படாவிட்டாலும் கூட, நான் இந்திய அணி வெல்வதற்காக இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: உத்தரபிரதேசத்தில் பாஜக 50 இடங்களை தாண்டாது - கள ஆய்வு மேற்கொண்ட செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உறுதி !