Sports
"தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை தொடரவேண்டும் என நினைக்கிறோம்" - CSK பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி !
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சிறந்த இடத்தில் உள்ளார். அது தொடர வேண்டும் என்று நினைக்கின்றோம். அவர் கிரிக்கெட் விளையாட்டை மகிழ்ச்சியோடு விளையாடுகிறார். ப்ந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையுன் அவருக்கென மாறுபட்ட வியூகங்களுடன் பந்து வீச வருகின்றனர். காரணம் எப்போதுன் ஒரு சிறந்த ஃபினிஷராக தோனி இருப்பதால் பந்துவீச்சாளர்கள் தனி வியூகம் அமைத்து பந்துவீச நினைக்கின்றனர்.
இறுதி நேர பந்துவீச்சில் இம்பேக்ட் ப்ளேயர் விதி இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இம்பேக்ட் பிளேயர் விதி பந்து வீசுபவர்களுக்கு நிச்சயம் சவாலாகவும் உள்ளது. முஸ்தஃபிக்யூர் ரஹ்மான் சிறப்பான பந்துவீச்சாளராக திகழ்கிறார். லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். நாளைய போட்டியில் அவருக்கு பந்து வீசுவது என்பது கொஞ்சம் கடினமானது தான், இருப்பினும் நாளைய போட்டியில் நிச்சயம் முழு கவனத்தை செலுத்துவோம்.
அடுத்தடுத்த போட்டிகளைப் பற்றி தற்போது நினைக்கவில்லை. அடுத்த மூன்று போட்டிகளை வென்றால் தங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்றாலும், தற்போதைக்கு நாளை போட்டியை பற்றி மட்டும் தான் சிந்திக்கிறோம்" என்று கூறினார்.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!