Sports
சேப்பாக்கத்தில் PRANK செய்த ஜடேஜா - தோனி : அம்பலப்படுத்திய துஷார் தேஷ்பாண்டே : நடந்தது என்ன ?
ஐபிஎல் தொடரின் இந்தாண்டுக்கான சீசன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி தான் ஆடியுள்ள 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தில் நீடிக்கிறது.
இதில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. சென்னை அணிக்கு கிட்டத்தட்ட 14 ஆண்டு காலம் தோனி தலைமை தாங்கி நிலையில் தற்போது ருதுராஜ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காகவும், சென்னை அணிக்காகவும் பல்வேறு கோப்பைகளை வென்றுகொடுத்த தோனி, அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். எனினும் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக ஆடி வருவதால் அவரின் ஆட்டத்தை அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அவர் மைதானத்துக்கு வந்தாலே ரசிகர்களின் சத்தம் விண்ணை எட்டும் அளவு செல்கிறது.
அந்த வகையில் நேற்று அவர் சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கியபோது ரசிகர்களின் சத்தம் சேப்பாக்கத்தையே அதிரவைத்தது. நேற்றைய போட்டியில் சிவம் துபே ஆட்டமிழந்ததும், தோனி வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், வீரர்கள் ஓய்வறையில் இருந்து ஜடேஜா வெளியே வந்தார். இதைப்பார்த்து சென்னை அணி வீரர்கள், ரசிகர்கள் திகைத்த பின்னர், ஜடேஜா மீண்டும் உள்ளே சென்றதும், தோனி வெளியேவந்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் தோனி, தோனி என முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.
இந்த நிலையில்,இது குறித்து பேசியுள்ள சென்னை அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே, “ நீ பேட்டிங் செய்ய கிளம்புவதுபோல நடி. பின் திரும்பி வந்துவிடு. அதற்குள் நான் கிரவுண்டிற்குள் செல்கிறேன் என்று தோனி ஜடேஜாவிடம் சொன்னதை நான் கேட்டேன்” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்களை வைத்து ஜடேஜாவும், தோனியும் பிராண்ட் செய்தது அம்பலமாகியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!