Sports
டபுள் டக்கர் திரைப்பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிராவோ : இணையத்தில் வைரலாகும் வீடியோ !
ஐபிஎல் தொடரில் தலா 5 கோப்பைகளை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. சென்னை அணிக்கு உலகம் முழுவம் ஏராளமான ரசிகர்களும் இருந்து வருகின்றனர். சென்னை அணியில் வெற்றிக்கு அதன் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்துக்கும் இருக்கும் நெருக்கம் முக்கியமானதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை அணியில் ஆட இளம்வீரர்களும், சர்வதேச வீரர்களும் விரும்புவது வழக்கமாக உள்ளது. மேலும், சிறந்த வீரர்களை சென்னை அணி நிர்வாகமும் கொண்டாடியே வருகிறது. அந்த வகையில் சென்னை அணியின் முக்கியமான வீரரான பிராவோவை சென்னை அணி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தது.
சென்னை அணி தவிர, சென்னை நகரின் ரசிகர் என்றே பிராவோ பலமுறை கூறிவந்துள்ளார். அவர் தற்போது டபுள் டக்கர் பட குழுவினரை அழைத்து வாழ்த்து தெரிவித்த சம்பவம் வைரலாகியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் கடைசியாக நடந்த ஆட்டத்தின்போது கினி கினி பாடல் இசைக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் பிராவோவுக்கு மிகவும் பிடித்துப்போனதால், அந்த பாடல் இடம்பெற்ற டபுள் டக்கர் பட குழுவினரை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். பின்னர் படத்தின் நாயகன் தீரஜ்ஜுடன் இணைந்து கினி கினி பாடளுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?