Sports
சொந்த மைதானத்திலேயே மும்பை அணிக்கு நடந்த சோகம் : ரசிகர்களின் செயலால் கவலையில் MI அணி நிர்வாகம் !
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளன்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போட்டி தொடங்கும் நேரத்தில், ஒலிபெருக்கியில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் பூ என கிண்டல் செய்யும் விதமாக கோஷமெழுப்பினர்.
அப்போது இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வரும்போது இன்னும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவார் என கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று நடைபெற்ற போட்டியில் சொந்த அணியின் ரசிகர்களாலேயே ஹர்திக் பாண்டியா கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.
நேற்று மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் போட இரு அணி கேப்டன்களும் அழைக்கப்பட்டனர். அப்போது மும்பை ரசிகர்கள் 'பூ' என ஹர்திக் பாண்டியாவை கிண்டல் செய்தனர். மேலும், ரோஹித் ரோஹித் என்றும் முழக்கமிட்டனர்.
ஐபிஎல் தொடர் 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், எந்த இந்திய வீரரும் ரசிகர்களால் மைதானத்தில் கிண்டல் செய்யப்பட்டதில்லை. ஆனால், தற்போது சொந்த அணி ரசிகர்களே மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை கிண்டல் செய்தது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!