Sports
இது T20 உலகக்கோப்பை ஆண்டு : Finisher-ஆக மீண்டும் கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக்... RCB அசத்தல் வெற்றி
17வது ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் களமிறங்கின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இருந்தே சீரான இடைவெளியில் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழந்தது வந்தது. இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணி சார்பில் கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 27 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு சார்பில் முகமது சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள் , அல்சாரி ஜோசப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 177 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க வீரர் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில், டூபிளசிஸ்(3), கேமிரான் க்ரீன் (3), மேக்ஸ்வெல் (3), ராஜத் படித்தர் (18) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடி வந்த கோலியும் 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
எனினும் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் மற்றும் லம்ரோர் சிறப்பாக ஆடி 4 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் அணியை வெற்றிபெற வைத்தனர். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களும், லம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தனர். சென்னைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக், இந்த போட்டியிலும் பினிஷெராக சிறப்பாக செயல்பட்டார்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!