Sports
கேப்டன்சி விவகாரம்: "என்னால் ஏதும் செய்ய முடியாது" - ஹர்திக் பாண்டியா கருத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள் !
கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.
குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்தார். இந்த சூழலில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், மும்பை அணி கேப்டன்சியை மாற்றிய விவகாரத்தில் என்னால் ஏதும் செய்ய முடியாது என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "மும்பை அணி நிர்வாகம் ரோஹித் ஷர்மாவிடமிருந்து என்னிடம் கேப்டன்சியை மாற்றியது அணியின் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை நான் அறிவேன். ஆனால், இது நிர்வாகத்தின் முடிவு. இந்த விவகாரத்தில் என்னால் ஏதும் செய்ய முடியாது.
ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக எனது கேப்டன்சியில் விளையாடுவது அவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். எனது கேப்டன்சியில் ரோஹித் ஒரு வீரராக விளையாடுவது எந்த வகையிலும் வித்தியாசமாக இருக்காது. எனக்கு உதவி தேவைப்படும் நேரம் தோள்கொடுத்து அவர் உதவி செய்வார். ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால், இப்போது எனக்குக் கொடுப்பட்ட கேப்டசியைச் சிறப்பாகச் செய்வதே எனது கடமை" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!