Sports
"எங்களுக்கெல்லாம் ஒரு கடவுளாக தான் தோனி இருந்தார்" - முன்னாள் இந்திய வீரர் புகழாரம் !
இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், எங்களுக்கெல்லாம் ஒரு கடவுளாக தான் தோனி இருந்தார் என முன்னாள் இந்திய வீரர் சவுரப் திவாரி கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், " ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து இந்தியாவுக்காக தோனி கிரிக்கெட் ஆட தொடங்கிய பின்னர்தான் ஜார்கண்ட் அணி குறித்து அனைவரும் கவனிக்க தொடங்கினர். இப்படி ஒரு அணி இருப்பது அதன்பின்னர் தான் அனைவர்க்கும் தெரியும். இதனால் ஜார்க்கண்ட்டை சேர்ந்த எங்களுக்கெல்லாம் ஒரு கடவுளாக தான் தோனி இருந்தார்.
தோனி எப்போதெல்லாம் ராஞ்சியில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் எங்களை சந்தித்து எங்களுக்கு நம்பிக்கை அளிப்பார். தோனி அணியை வழிநடத்தும் போது எங்களுக்கு பல சுதந்திரம் கொடுத்திருந்தார். நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் எங்களுக்கு துணையாக அவர் எப்போதும் நிற்பார்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!