Sports

அடுத்து T20 உலககோப்பைக்கும் ரோஹித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டன் - உறுதி செய்த BCCI !

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பை நடைபெறும் நிலையில், அந்த தொடருக்கு சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது.

சமிபத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கூட இளம்வீரர்கள் அடங்கிய இந்திய அணியே பங்கேற்றது. இதனால் இந்தியில் அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் டி20 பயணம் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால், அவர்களின் டி20 பயணம் குறித்து அவர்களே முடிவே செய்துகொள்ளலாம் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவடைந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20தொடரில் இந்த இருவரும் அணியில் இடம்பிடித்தனர். இதனால் அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் அவர்கள் இடம்பெறுவர் என்பது உறுதியானது.

ஆனால் அந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு யார் தலைமை தாங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில்தான் களமிறங்கும் என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய் ஷா, " 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிபோட்டியில் வேண்டுமானால் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்று ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. அடுத்ததாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையை வெல்லும்" என்று கூறியுள்ளார்.

Also Read: இறுதியாக இந்திய அணியில் வாய்ப்பு - சர்ஃப்ராஸ் கானின் இந்திய அணி தொப்பியை முத்தமிட்டு நெகிழ்ந்த தந்தை!