Sports
"பாகிஸ்தானின் PSL தொடரை விட IPL தொடர்தான் சிறப்பானது" - ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா கருத்து !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், உலகிலேயே ஐபிஎல் தொடர் தான் சிறந்த கிரிக்கெட் தொடர் என ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா கூறியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், " உலகிலேயே ஐபிஎல் தொடர்தான் உயர்தரமானது. நான் பாகிஸ்தான் பிஎஸ்எல் தொடரில் விளையாட உள்ளேன். அந்தத் தொடருக்காக நான் காத்திருக்கிறேன். இந்த தொடர் நான் ஐபிஎல் தொடரில் ஆட உதவியாக இருக்கும். ஐபிஎல் தொடரின் சிறப்பே உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு வீரர்கள் விளையாடுவதற்கு அதனை தேர்ந்தெடுப்பதுதான்.
எனவே உலகின் சிறந்த லீக் என்று சொல்லும் போது ஐபிஎல் மற்ற தொடர்களை விட வெகு தொலைவில் முன்னணியில் இருக்கிறது. பிஎஸ்எல் தொடரும் கிட்டத்தட்ட சிறந்த தொடராகும். ஆனால் ஐபிஎல்தான் இந்த உலகிலேயே சிறந்த லீக் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!