Sports
"பல விசயங்கள் தவறாக இருக்கிறது" - ரோஹித் சர்மா மனைவியின் கருத்தால் மும்பை அணியை விமர்சிக்கும் ரசிகர்கள் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதில் மேலும் அதிக வருவாய் ஈட்டவேண்டும் என கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.
குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்து வருகிறார். இதனிடையே ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவுக்கு பதில் மும்பை அணிக்கு கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார்.
ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர், பாட்காஸ்ட் ஒன்றில் மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேசினார். அதில் "கடந்த இரண்டு ஐபிஎல் சீசனாக ரோஹித் சர்மா கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், அவரால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது கேப்டன் பொறுப்பின் அழுத்தத்திலிருந்து விடுபட்டு பேட்டிங்கில் அதிக ரன்கள் குவிப்பர். இது அவருக்கு நாங்கள் கொடுத்த வாய்ப்பு " என்று பேசியிருந்தார்.
Smash Sports' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்க் பவுச்சரின் இந்த பேச்சு பதியப்பட்டிருந்த நிலையில், அதில் கமெண்ட் செய்துள்ள ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, "இதில் பல விசயங்கள் தவறாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!