Sports
குடிநீருக்கு பதில் ஆசிட்... ICU-வில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்: திட்டமிட்ட கொலை முயற்சியா ?
கர்நாடகத்தை சேர்ந்த தொடக்க வீரர் மயங்க் அகர்வால். இவர் ரஞ்சி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அதன்பின்னர் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து 2019 முதல் 2022 வரை பல்வேறு போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக செயல்பட்டார். ஆனால், தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்த தவறினார்.
இதனால் இந்திய அணியில் அவர் தனது இடத்தை இழந்தார். தற்போது உள்நாட்டு தொடர்களில் ஆடிவரும் மயங்க் அகர்வால் ரஞ்சி டிராபி தொடரில் கர்நாடகா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடகா அணி வெற்றிபெற்ற பின்னர் அடுத்த போட்டிக்காக அவர் குஜராத்துக்கு கிளம்பியுள்ளார்.
அப்போது விமானத்தில் அவர் தண்ணீர் குடித்துள்ளார். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே தொண்டை மற்றும் நாவில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர், விமான ஊழியர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். அதன் பின்னர் விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியுள்ளது.
தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு நடத்தப்பட்ட சோதனையில்,மயங்க் அகர்வால் தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டை குடித்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மயங்க் அகர்வால் அபாய கட்டத்தை கடந்து ஐசியூ-வில் உள்ள நிலையில், அவரால் 8 மணி நேரத்திற்கு பேச முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!