Sports
கேப்டனாகி தனித்து விடப்பட்ட ஷாகின் அப்ரிடி : ஒட்டுமொத்தமாக புறக்கணித்த மூத்த வீரர்கள்.. நடந்தது என்ன ?
2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இறுதியில் தனது இறுதி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும், கடந்த டி20 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டது. அதோடு கடந்த உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேறியது.
சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியால் இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறமுடியவில்லை. இதன் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார். பின்னர் அவர் இடத்தில் டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத், டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக ஷாகின் அப்ரிடி செயல்பட்டு வருகிறார். இந்த தொடரின் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் அணியின் மூத்த வீரர்களிடம் ஷாகின் அப்ரிடி எந்த உரையாடலும் நடத்தாதது விவாதமாகியுள்ளது.
போட்டி முழுவதுமே யாரின் ஆலோசனையையும் கேட்காமல் ஷாகின் அப்ரிடி செயல்பட்டார். இதனால் பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற மூத்த வீரர்கள் கூட ஷாகின் அப்ரிடியை கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதனால் அந்த அணியின் மூத்த வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு இருப்பது வெட்ட வெளிச்சமாக கிரிக்கெட் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!