Sports
“மொயி மொயி” - பெங்களூரு அணியின் பந்துவீச்சை கிண்டல் செய்த முன்னாள் RCB வீரர்.. விவரம் என்ன ?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் அதற்கான ஏலம் சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த ஏலத்தில் பெங்களூரு அணி பந்துவீச்சுக்கு முக்கிய வீரர்களை எடுக்காமல் போனதாக விமர்சனம் வைக்கப்பட்டது. ஏற்கனவே அந்த அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சஹாலை அணியில் இருந்து விடுத்திருந்தது. இதில் இந்த ஆண்டும் முக்கிய அந்தவீச்சாளர்களை விடுத்திருந்தது.
இந்த நிலையில், பெங்களூரு அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சஹால் அந்த அணியை கிண்டல் செய்யும் விதமாக பதிவுட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஹால் ஆன்லைன் கேம் ஒன்றில் கருத்துக்களை பரிமாறினார். அப்போது, ரசிகர்க ஒருவர் தற்போதைய பெங்களூரு அணியின் பந்துவீச்சு குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு நேரடியாக பதிலளிக்காத சஹால், “மொயி மொயி” என்று செர்பிய பாடலில் இருந்து உருவான வார்த்தையை குறிப்பிட்டார். பொதுவாக இந்த பாடல் கிண்டல் செய்யும் விதமாக பகிரப்படும் நிலையில், சஹலும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை கிண்டல் செய்யும் விதமாக இவ்வாறு கூறியுள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!