Sports
இணையத்தை ஆக்கிரமித்த மெஸ்ஸி : அதிகம் தேடப்பட்ட கிளப்பான இன்டர் மியாமி - ரொனால்டோவின் நிலை என்ன ?
அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார் . PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்தாண்டோடு முடிவடைந்த நிலையில், அடுத்ததாக அவர் தொடர்ந்து PSG அணியில் தொடருவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்தது.
மேலும், மெஸ்ஸி நீண்ட நாள் ஆடிய பார்சிலோனா கால்பந்து கிளப் மீண்டும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த அணியோடு மெஸ்ஸியின் மேலாளரும் தந்தையுமான ஜோர்ஜே பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்திகளை பார்சிலோனா கால்பந்து கிளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா மறுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி PSG கிளப்பில் இருந்து விலகுவதில் உறுதியாக உள்ளார் என்றும், இதன் காரணமாக இந்த சீசன் முடிந்ததும் அவர் PSG கிளப்பில் இருந்து விலகுவார் என்றும் PSG அணியில் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் அறிவித்தார். இதன் காரணமாக மெஸ்ஸி அடுத்து எந்த கால்பந்து அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருந்த நிலையில் மெஸ்ஸி அமெரிக்காவின் MLS தொடரில் பங்கேற்கும் இன்டர் மியாமி அணியில் இணையவுள்ளதாக அந்த அணி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதன் படி இன்டர் மியாமி அணியில் இணைந்த அவர், அந்த அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த நிலையில், இந்த ஆண்டு கூகிளில் மெஸ்ஸி ஆடி வரும் இன்டர் மியாமியை அணியை அதிகம் பேர் தேடியதாக அறிக்கை வெளியாகியுள்ளது. அதன் படி சர்வதேச அளவில் அதிக பயனர்கள் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி குறித்து கூகிளில் தேடியுள்ளனர்.
அதே போல இந்த பட்டியலில் ரொனால்டோ ஆடி வரும் அல் நாசர் அணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முதல் முறையாக இந்த பட்டியலில் ஐரோப்பிய கால்பந்து கிளப் அல்லாத இரண்டு அணிகள் இடம்பெற்றுள்ளது. அந்த அளவு மெஸ்ஸி, மற்றும் ரொனால்டோ ஆகியோர் உலகளவில் பிரபலமான கால்பந்து வீரர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!