Sports
“அணி வீரர்களை பாதுகாக்கவே அவ்வாறு நடந்துகொண்டேன்” - கோலியுடனான மோதல் குறித்து கம்பீர் கருத்து !
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் வென்ற மகிழ்ச்சியில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை எரிந்து வெற்றியை கொண்டாடியது மற்றும் லக்னோ பயிற்சியாளர் காம்பிர் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து லக்னோ மைதானத்தில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியின்போது பெங்களூரு அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ அணி வீரர் நவீன் உல் காஹ்க்கும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவை தாக்கி அதில் உள்ள தூசுதான் நீ என நவீன் உல் காஹ்க்கை நோக்கி காட்டியதுபோல காட்சி இடம்பெற்றது.
பின்னர் இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் லக்னோ வீரர் கையில் மேயர்ஸ் விராட் கோலியோடு பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை கம்பீர் பேசவேண்டாம் என்பதுபோல இழுத்துச்சென்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி கம்பீரிடம் ஏதோ கூற கோலிக்கும் கம்பீருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர். இந்த விவகாரம் அந்த ஐபிஎல் தொடர் முழுவதும் எதிரொலித்தது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கம்பீர் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "அந்த தருணத்தில் நான் எனக்கு அணிக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட்டிருந்தேன். எனது அணி வீரர்களை பாதுகாக்கும் விதமாகவே நான் அவ்வாறு செயல்பட்டேன். போட்டி நடைபெறும் நேரத்தில் நான் குறுக்கிடவில்லை. ஆனால் போட்டி முடிந்த பிறகும் வாக்குவாதம் தொடர்ந்ததால், அணியின் ஆலோசகர் என்ற முறையில் எங்கள் வீரர்களுக்கு ஆதரவாக பேசினேன்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!