Sports
60 நொடிக்குள் பந்து வீசாவிட்டால் பெனால்டி: ICC-யின் புதிய விதிமுறையால் பாதிக்கப்படும் பந்துவீச்சாளர்கள்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும், '60 நொடி' விதிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், பந்துவீச்சாளர்களுக்கு பாதகமாகவும் இருக்கிறது என விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஐசிசி தற்போது அறிமுகப்படுத்தியுள்ள '60 நொடி' விதிமுறை பந்துவீச்சாளர்களுக்கு எதிரானதாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். கிரிக்கெட்டில் ஏற்கனவே க 'Slow Over Rate' எனும் விதிமுறை அமலில் இருக்கிறது.
இந்த விதிமுறைப்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசும் அணி இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசத் தொடங்காவிட்டால் மீதம் இருக்கும் ஓவர்களில் வட்டத்திற்கு வெளியே ஒரு ஃபீல்டரைக் குறைவாகவே வைக்க முடியும். அதோடு தாமதமாக பந்துவீசும் அணிக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேரத்தை மேலும் குறைக்கும் வகையில், ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையில் அதிகபட்சம் 60 நொடி மட்டுமே இடைவேளை இருக்கவேண்டும் என்று ஐசிசி புதிய விதிமுறை கூறுகின்றது. அதாவது ஒரு ஓவரை முடித்த அடுத்த 60 நொடிக்குள் அடுத்த ஓவரை வீச வேண்டும். அப்படி வீச தவறினால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
அதே போல, பெண்களுக்கான கிரிக்கெட்டில் சமஅளவிலான போட்டியை உறுதி செய்யும்பொருட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகளுக்கு அனுமதியில்லை எனவும் ஐசிசி அறிவித்திருக்கிறது. அதே நேரம் உள்ளூர் கிரிக்கெட்டில் அந்தந்த நாட்டு சட்டங்களின் படி திருநங்கைகள் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!