Sports
மைதானத்தில் மோதிக்கொண்ட அர்ஜென்டின- பிரேசில் ரசிகர்கள் : மோதலைத் தடுக்க களத்தில் குதித்த மெஸ்ஸி !
2026-ம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் கூட்டாக நடத்துகின்றன. இந்த உலகக்கோப்பை தொடருக்கான தென்னமெரிக்க தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் உலகசாம்பியன் அர்ஜென்டினா அணியும், முன்னாள் உலகசாம்பியன் பிரேசில் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.
பின்னர் இரண்டாவது பாதியில், அர்ஜென்டினா வீரர் ஒட்டமெண்டி அந்த அணிக்காக கோல் அடித்து அசத்தினார். பின்னர் 81-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ஜோயலின்டன் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். இறுதி வரை பிரேசில் அணி பதில் கோல் அடிக்காத நிலையில், அர்ஜென்டினா அணி, 1-0 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த போட்டி தொடங்கும் முன்னர் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டு அது அடிதடியாக மாறியது. அப்போது அங்கு வந்த போலிஸார் அர்ஜென்டினா ரசிகர்களை தடியால் தாக்கினர். இதனால் அதிர்ச்சியடைத்த மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டினா மற்றும் பிரேசில் வீரர்கள் இந்த மோதலை தடுக்க களத்தில் இறங்கினர்.
அதில் அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் ஒரு போலீஸ் அதிகாரியின் கையிலிருந்து ஒரு தடியடியைப் பிடிக்க முயன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஒரு கட்டத்தில் இந்த மோதல் முடிவுக்கு வந்த நிலையில், 30 நிமிடம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது.
Also Read
-
பீகாரில் கூடுதலாக 3 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்! : சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் ECI அட்டூழியம்!
-
வரி விதிப்பு விவகாரம் : “வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்” - சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்!
-
“Oxford பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் திருவுருவப்படம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“கழகத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, 13 முறை சிறை சென்றவர் குளித்தலை அ.சிவராமன்” : முதலமைச்சர் இரங்கல்!
-
ராகுல் பயணம் : “பீகாருக்கான எழுச்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான எழுச்சி” - முரசொலி தலையங்கம்!