Sports
"இந்தியா தோற்கடிக்கப்பட முடியாத அணியாக இறுதிவரை இருக்கும்" - ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கணிப்பு !
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இது வரை ஆடிய 9 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. இதனை காரணமாக இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்து அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 102 ரன்கள் குவிக்க, ஷ்ரேயாஸ் 128 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக அந்த அணி 47.5 ஓவர்களில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் லீக் போட்டிகளில் தோல்வியே தழுவாத அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், தோற்கடிக்கப்பட முடியாத அணியாக இறுதி வரை இந்திய அணியினர் இருப்பார்கள் என்றே நம்புகிறேன் என முன்னாள் மேற்கிந்திய அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "தொடர் வெற்றிகளுடன் கோப்பையை வெல்வதை நோக்கி இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது. இதுதான் இந்திய அணியின் எண்ணமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆக்ரோஷமான அணுகுமுறை இந்தியர் வீரர்களுக்கு இதுவரை திறம்பட வேலை செய்துள்ளது. இத்தகைய மனநிலையிலிருந்து கீழே இறங்கினால் ஏதாவது தவறு நிகழ்ந்து விடும். அவர்கள் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக இறுதி வரை இருப்பார்கள் என்றே நம்புகிறேன். இதற்காகத்தான் அவர்களும் முயற்சி செய்கிறார்கள்.இது வரை நன்றாக ஆடிவிட்டோம். எனவே ஏதோ ஒரு கட்டத்தில் மோசமான ஆட்டம் வந்தே தீரும் என்ற பயம் ஏற்படலாம். இத்தகைய எதிர்மறை சிந்தனைகளை மனதிலிருந்து அறவே களைந்து நெகெட்டிவ் எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!