Sports
AFG vs ENG : “என்னை கட்டியணைத்தது ஒரு இந்திய சிறுவன்..” - ஆப்கான் வீரர் முஜீபுர் ரஹ்மான் நெகிழ்ச்சி!
இந்தியாவில் 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டித்தொடரில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி நேற்றைய முன்தினம் (அக் 15) நடைபெற்றது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண பலரும் சென்றிருந்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 40.3 ஓவர்களில் 215 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற ஆப்கான் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வந்தன.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த வெற்றயே ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும் முதல் வெற்றியாகும். தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி சார்பாகப் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட வீரர் முஜீபுர் ரஹ்மான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆப்கான் வெற்றியை கண்ட ஒரு சிறுவன் நெகிழ்ந்து ஓடி வந்து வீரர் முஜீபுர் ரஹ்மானை கட்டியணைத்து அழுது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஆப்கான் வீரரை கட்டியணைத்தது ஒரு ஆப்கான் சிறுவன் என்று அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறிய நிலையில், தற்போது அது ஆப்கான் சிறுவன் அல்ல என்றும், அது ஒரு இந்திய சிறுவன் என்றும் ஆப்கான் வீரர் முஜீபுர் தெரிவித்துள்ளது அனைவர் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆப்கான் வீரர் முஜீபுர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஆப்கானி சிறுவன் அல்ல, ஒரு இளம் இந்திய சிறுவன். எங்களின் வெற்றியில் அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான். இந்தியாவை சேர்ந்த இந்த குட்டி சிறுவனை டெல்லியில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல, இது ஒரு உணர்வு.
எங்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்ததற்கு மிகவும் நன்றி. உங்கள் அனைவரின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். காட்டிய அன்புக்கு நன்றி டெல்லி." என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் வீரர்களை, குஜராத் மோடி மைதானத்தில் இந்திய ரசிகர்கள் சிலர் வம்பிழுக்கும் விதமாக 'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கமிட்டு சர்ச்சையான நிலையில், இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!